பைக்

115கிமீ ரேன்ஜ், 90 கிமீ வேகம் - ஏத்தர் 450S மாடல் விவரங்கள் வெளியீடு!

Published On 2023-06-03 07:04 GMT   |   Update On 2023-06-03 07:04 GMT
  • ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும்.
  • தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய 450S மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும். புதிய மாடல் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. எனினும், இது ஏத்தர் 450X மாடலில் இருப்பதை விட அளவில் சிறியதாகவே இருக்கும் என்று தெரிகிறது. தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் வழக்கமான 125சிசி பெட்ரோல் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும்.

இந்திய சந்தையில் புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஃபேம் 2 திட்ட பலன்களை சேர்த்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. இதன் வினியோகம் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 

Tags:    

Similar News