பைக்
null

115கிமீ ரேன்ஜ்.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகமாகும் ஏத்தர் 450S

Published On 2023-07-12 05:21 GMT   |   Update On 2023-07-20 03:58 GMT
  • புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் போர்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
  • ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய முடிவு.

ஏத்தர் 450S மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 3-ம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றே சிறிய பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது.

முந்தைய ஏத்தர் 450X மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு, ஒன் டச் வசதி வழங்கப்படவில்லை.

 

சமீபத்தில் ஃபேம் 2 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிகரித்தது. இதன் காரணமாக ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஏத்தர் முடிவு செய்துள்ளது.

ஏத்தர் 450S மாடலும் 450X போன்றே மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இந்த மாடலில் 6.2 கிலோவாட் திறன் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Tags:    

Similar News