பைக்

2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் 300 அறிமுகம்

Published On 2022-10-29 08:13 GMT   |   Update On 2022-10-29 08:13 GMT
  • யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

Tags:    

Similar News