வேற லெவல் அப்டேட்களுடன் 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V இந்தியாவில் அறிமுகம்
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2023 எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டரன்-பை-டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டில்பார் ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட் ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.
புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் மூன் எல்லோ, பேந்தர் பிளாக் மெட்டாலிக் மற்றும் ஸ்டெல்த் எடிஷன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் ஹீரோ எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள என்ஜின் OBD2 மற்றும் E20 ரக எரிபொருளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் 7-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.