பைக்
பவுன்ஸ் இன்பினிட்டி

நாடு முழுக்க 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்கும் பவுன்ஸ் இன்பினிட்டி

Published On 2022-06-01 09:56 GMT   |   Update On 2022-06-06 09:51 GMT
பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவிலும் அதன்பின் 9 நகரங்களில் இவை அமைக்கப்படுகிறது.


பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் விரைவில் பேட்டரி மாற்றும் மையங்களை (battery swapping station) கட்டமைக்க இருக்கிறது. இதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன. 

பல கட்டங்களாக நிறுவப்பட இருக்கும் பேட்டரி மாற்றும் மையங்கள் முதலில் பெங்களூருவிலும், அதன்பின் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. ஸ்கூட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பவுன்ஸ் ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அருகாமையில் உள்ள பேட்டரி மாற்றும் மையத்தை அறிந்து கொள்ளலாம். 



பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் E1-ஐ இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. அதாவது ஒரு வேரியண்டில் பேட்டரியும் மற்றொரு வேரியண்டில் பேட்டரி இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாத ஸ்கூட்டர்களை வாங்கினால், பேட்டரி மாற்றும் மையங்களில் உள்ள பேட்டரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி E1 மாடலை பேட்டரி இல்லாமல் வாங்கும் போது ரூ. 56 ஆயிரத்து 999 என்றும், பேட்டரியுடன் சேர்த்து வாங்கும் போது ரூ. 79 ஆயிரத்து 999 வரை செலுத்த வேண்டும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News