பைக்
ஓலா S1 ப்ரோ

புதிய S1 ப்ரோ விலையை திடீரென மாற்றிய ஓலா எலெக்ட்ரிக்

Update: 2022-05-22 05:15 GMT
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு தற்போது ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஓலா S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கி வருகிறது. இந்த நிலையில், ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை அப்டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்த நிலையில், ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு வலைதளம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 

இந்தியாவில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை அடுத்து ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை உயர்வு பற்றிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அதன்படி ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த விற்பனைக்கு வாங்குவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது. 

Tags:    

Similar News