பைக்
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec

ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-05-20 09:03 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்ப்ளெண்டர் பிளஸ் மாடலை ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடல் மொத்தம் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்ப்ளெண்டர்  பிளஸ் மோட்டார்சைக்கிளின் புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட் ஹீரோ ஸ்ப்ளெண்டர்  பிளஸ் Xtec என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 72 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மேட் ஷீல்டு கோல்டு மாடலை விட ரூ. 1,200 அதிகம் ஆகும். 

முன்னதாக கிளாமர், பிளெஷர், டெஸ்டினி போன்ற மாடல்களை அப்டேட் செய்து Xtec வெர்ஷனில் அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப் தற்போது ஸ்ப்ளெண்டர்  மாடலையும் அப்டேட் செய்து இருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.ஸ்ப்ளெண்டர்  Xtec மாடலிலும் 92.7சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.9 ஹெச்.பி. பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் மைலேஜை கருத்தில் கொண்டு i3s தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால், எஸ்.எம்.எஸ். அலர்ட், ரியல் டைம் மைலேஜ் ரீட்-அவுட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப் போன்ற அம்சங்கள் உள்ளன. 

இந்தியாவில் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர்  Xtec மாடல்: ஸ்பார்க்லிங் பீட்டா புளூ, கேன்வாஸ் பிளாக், டொர்னாடோ கிரே மற்றும் பியல் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புது வேரியண்ட் சேர்த்து ஸ்ப்ளெண்டர்  மோட்டார்சைக்கிள் இந்தியாவில் தற்போது நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 69 ஆயிரத்து 380, எக்ஸ்-ஷோரூம் ஆகும். 
Tags:    

Similar News