பைக்
2022 கே.டி.எம். RC 390

2022 கே.டி.எம். RC 390 இந்திய வெளியீட்டு விவரம்

Update: 2022-05-17 08:51 GMT
கே.டி.எம். நிறுவனம் விரைவில் 2022 RC 390 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக 2022 கே.டி.எம். RC390 இருக்கிறது. இந்த மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்வெளியாகி உள்ளது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் முந்தைய மாடலை விட அதிக அப்டேட்களை பெற்று இருக்கிறது. 

இவற்றில் புதிய டிரெலிஸ் ஃபிரேம், போல்ட்-ஆன் சப்-ஃபிரேம் உள்ளிட்டவை அடங்கும்.இதுதவிர 1.7 கிலோ குறைந்த எடை கொண்ட 5 ஸ்போக் அலாய் வீல்கள், பெரிய 13.7 லிட்டர் பியூவல் டேன்க், லைட் பிரேக்கிங் ஹார்டுவேர்  வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் காரணமாக புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் எடை குறைந்து இருக்கும் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் புது மாடல் முன்பை விட சிறப்பான ஹேண்ட்லிங் வழங்கும். 2022 கே.டி.எம். RC390 மாடலில் புதிய TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குவிக்‌ஷிப்டர், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த என்ஜின் 43.5 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 கே.டி.எம். RC390 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR310, கவாசகி நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News