பைக்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இ ஸ்கூட்டர்களை சத்தமின்றி அப்டேட் செய்யும் ஓலா எலெக்ட்ரிக்

Update: 2022-05-16 08:19 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ ஸ்கூட்டர் மாடல்களில் மார்ச் 2022-க்கு முன் வினியோகம் செய்யப்பட்ட யூனிட்களுக்கு மட்டும் மேம்பட்ட VCU-க்களை வழங்க துவங்கி உள்ளது.

ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறுவது, ரிவர்ஸ் மோடில் திடீரென அதிவேகமாக இயங்குவது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு VCU (வெஹிகில் கண்ட்ரோல் யூனிட்) கொண்டு அப்டேட் வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

இவ்வாறு VCU அப்டேட் செய்யப்படும் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட அதிகளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. பழைய மாடல்கள் மட்டுமின்றி புதிதாக உருவாக இருக்கும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் மேம்பட்ட VCU-க்களே வழங்கப்பட இருக்கின்றன. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட VCU-க்களில் இ ஸ்கூட்டர்களில் வரும் பிரச்சினைகளை தீர்க்கும் என தகவல் வெளியாகி உள்ளது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்போர்டு VCU-க்களை வழங்கி வருகிறது. முன்னதாக தீ விபத்து மற்றும் ரிவர்ஸ் மோடில் அதிவேகமாக இயங்குவது போன்ற பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஸ்கூட்டர்களை பரிசோதனை செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருந்தது.

இதுதவிர வாகனங்களில் வழங்கப்படும் பேட்டரி செல் மற்றும் பேட்டரி பேக் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை ஓலா எலெக்ட்ரிக் தொடர்ச்சியாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. VCU யூனிட்களின் தெர்மல் மேனேஜ்மண்ட்  பேட்டரி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். இந்த நிலையில், VCU அப்டேட் மூலம் பல்வேறு பிரச்சினைகளை ஓலா எலெக்ட்ரிக் எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News