பைக்
லைவ் வயர் S2 டெல் மார் LE

நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எலெக்ட்ரிக் பைக்

Published On 2022-05-13 09:14 GMT   |   Update On 2022-05-13 09:14 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ் வயர் பிராண்டு இ பைக் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு லைவ் வயர் சமீபத்தில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட S2 டெல் மார் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் இதே மாடலின் லான்ச் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் லைவ் வயர் S2 டெல் மார் LE மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

புதிய டெல் மார் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த இ பைக் 80 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது லைவ் வயர் ஒன் மாடலில் உள்ளதை விட 20 சதவீதம் குறைவு ஆகும். மேலும் இது முந்தைய மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது.

இந்த இ பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த மாடலில் பில்ட் இன் GPS, இண்டர்நெட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவர் தி ஏர் அப்டேட் மூலம் புது அம்சங்கள் வழங்கப்படும். 
Tags:    

Similar News