பைக்
ராயல் என்பீல்டு புல்லட் 350

இந்தியாவில் புல்லட் 350 விலையில் திடீர் மாற்றம் - புதிய விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-05-10 08:05 GMT
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த மாத நிலவரப்படி புல்லட் 350 மாடல் விலை ரூ. 2 ஆயிரத்து 874 அதிகரித்து உள்ளது. 

புதிய விலை விவரங்கள்:

ராயல் என்பீல்டு புல்லட் 350 ஸ்டாண்டர்டு மாடல் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 999
ராயல் என்பீல்டு புல்லட் 350 கிக்ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 674
ராயல் என்பீல்டு புல்லட் 350 எல்க்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 338

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய J ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் புதிய கிளாசிக் 350 மற்றும் Meteor 350 மாடல்களை போன்று இல்லாமல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய பிளாட்பார்மில் உருவாகி, விற்பனை செய்யப்பட்டு வரும் ஒற்றை மாடலாக புல்லட் 350 இருந்து வருகிறது. முன்னதாக புதிய தலைமுறை புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

தற்போதைய புல்லட் 350 மாடல் சிங்கில் கிராடில் பிரேம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 346சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.2 பி.ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Tags:    

Similar News