பைக்
ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரம்

Update: 2022-05-08 04:45 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் நிலையில் இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவது பற்றிய தகவலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. இதே பெயரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சூட்டும் போது, அதன் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என ஹோண்டா நம்புகிறது.

எனினும், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குமா அல்லது தனது ஆக்டிவா மாடலை மாடிபை செய்து எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனம் பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் டெஸ்டிங் செய்து வருகிறது. 
Tags:    

Similar News