பைக்
பஜாஜ் பல்சர் 250

சத்தமின்றி பல்சர் மாடலை அப்டேட் செய்த பஜாஜ்

Update: 2022-05-07 08:05 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளில் சத்தமின்றி புது அப்டேட் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது. புது அப்டேட் படி பல்சர் 250 மாடல் இனி கிரீபியன் புளூ நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் பல்சர் N250 மற்றும் பல்சர் F250 மாடல்களில் கிடைக்கும். புகிய நிறம் கொண்ட வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், இரு மாடல்களின் புது நிறம் கொண்ட வேரியண்ட் தற்போதைய விலையிலேயே கிடைக்கும்.

இந்தியாவில் பஜாஜ் பல்சர் F250 கரீபியன் புளூ நிற மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் பஜாஜ் பல்சர் N250 கரீபியன் புளூ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் ஹெட்லைட் கவுல், முன்புற பெண்டர், என்ஜின் கவுல், பியூவல் டேன்க் மற்றும் ரியர் பேனல் என அனைத்து இடங்களிலும் புளூ நிற பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.இத்துடன் வெளிப்புற நிறத்திற்கு மேட்ச் செய்யும் வகையில் வீல் ஸ்ட்ரிப்களில் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மாற்றங்கள் நிறத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News