பைக்
2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

ரைடிங் மோட் உள்பட புது அம்சங்களுடன் அறிமுகமான 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

Published On 2022-05-06 10:47 GMT   |   Update On 2022-05-06 10:47 GMT
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுக்கு சிறப்பு நிதி சலுகைகள் மற்றஉம் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில், விசேஷ மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் தற்போது புதிதாக கே.டி.எம். பேக்டரி ரேசிங் புளூ மற்றும் டார்க் கால்வேனோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் தற்போது ஸ்டிரீட் மற்றும் ஆஃப் ரோடு என இருவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.



இரு ரைடிங் மோட்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் லெவல்கள் மாற்றப்படும். ஆஃப் ரோடு மோட் கொண்டு பைக்கினை சிறப்பாக கண்ட்ரோல் செய்ய முடியும். இத்துடன் லீன் சென்சிடிவ் ABS வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ரோபஸ்ட் 5 ஸ்போக் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலிலும் 373 சிசி, சிங்கில் சிலண்டர், 5 ஸ்பீடு, லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Tags:    

Similar News