பைக்
டி.வி.எஸ். என்டார்க் XT

ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் என்டார்க் XT மாடலை அறிமுகம் செய்த டி.வி.எஸ்.

Published On 2022-05-03 13:32 IST   |   Update On 2022-05-03 13:32:00 IST
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் ஸ்கூட்டரின் XT வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் மாடலின் புதிய XT வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT விலை ரூ. 1,02,823 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய டி.வி.எஸ். என்டார்க் XT மாடலில் ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம், TFT மற்றும் LCD கன்சோல், 60 ஹை-டெக் அம்சங்கள், டி.வி.எஸ். இன்டெலிகோ தொழில்நுட்பம், மேம்பட்ட ஸ்டார்ட்-ஸ்டாப் பன்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட் அலாய் வீல்கள் உள்ளன.



டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் சமூக வலைதள நோட்டிபிகேஷன் அலெர்ட், ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற மிக முக்கிய விவரங்களை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள டிராபிக் டைம் ஸ்லைடர் ஸ்கிரீன்களை கொண்டு நேரலை விளையாட்டு ஸ்கோர்கள், செய்தி மற்றும் பல்வேறு விவரங்களை போக்குவரத்து நெரிசல் அல்லது சிக்னலில் நிற்கும் போது பார்க்க முடியும்.

புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் 124.8 சிசி, சிங்கில் சிலிண்டர், 3 வால்வு, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 பி.ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இதில் உள்ள SmartXtalk அம்சம் வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதை கொண்டு ஸ்கூட்டர் மோட், ஸ்கிரீன் பிரைட்னஸ், நேவிகேஷன், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை குரல் வழியே மேற்கொள்ள முடியும். இத்துடன் எரிபொருள் குறைவது, வீணாவது, மழை எச்சரிக்கை, போன் பேட்டரி குறைவது போன்ற தகவல்களையும் இந்த ஸ்கூட்டர் வழங்கும். 

Similar News