பைக்
யமஹா FZ

மார்ச் மாதம் மட்டும் 39 சதவீத வளர்ச்சி - விற்பனையில் அதிரடி காட்டும் யமஹா FZ

Published On 2022-05-02 07:56 GMT   |   Update On 2022-05-02 07:56 GMT
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் மார்ச் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


யமஹா நிறுவனத்தின் FZ சீரிஸ் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடலாக தொடர்ந்து நீடிக்கிறது. மார்ச் 2022 மாதத்தில் மட்டும் யமஹா FZ விற்பனை 39 சதவீதம் அதிகரித்து உள்ளது. 

மார்ச் மாதம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 23 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 மார்ச் மாதத்தில் யமஹா நிறுவனம் 16 ஆயிரத்து 563 FZ யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இந்தியாவில் யமஹா FZ ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

யமஹா FZ மாடலில் பாடி நிறத்தால் ஆன உபகரணங்கள், FZ-S மாடலில் அதிக பிரீமியம் தோற்றம் வழங்கும் குரோம் அம்சங்கள் உள்ளன. எனினும், இரு மாடல்களிலும் ஒரே திறன் கொண்ட என்ஜினே வழங்கப்படுகின்றன. இரு மாடல்களும் 149சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கின்றன. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News