பைக்
டி.வி.எஸ். என்டார்க்

விரைவில் இந்தியா வரும் டி.வி.எஸ். என்டார்க் XT

Update: 2022-04-29 09:16 GMT
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்டார்க் XT ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் என்டார்க் ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. டி.வி.எஸ். என்டார்க் XT பெயரில் புது ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது ஸ்டாண்டர்டு,  ரேஸ் எடிஷன், சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மற்றும் ரேஸ் XP என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.அந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது வேரியண்ட் சேர்த்தால், டி.வி.எஸ். என்டார்க் மாடல் மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய XT வேரியண்டில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் புது அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுதவிர இந்த வேரியண்ட் பிரத்யேக ஸ்டைலிங், எக்ஸ்டீரியர் மற்றும் புது கிராபிக்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய டி.வி.எஸ். என்டார்க் டிரம் பிரேக் கொண்ட பேஸ் மாடல் விலை ரூ. 77 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 81 ஆயிரத்து 500-இல் இருந்து துவங்குகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய XT மாடல் தற்பேதைய டாப் எண்ட் XP வேரியண்டின் மேல் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News