பைக்
2022 கவாசகி நின்ஜா 300

ரூ. 3 லட்சம் பட்ஜெட்டில் 2022 கவாசகி நின்ஜா 300 - இந்தியாவில் வெளியானது

Update: 2022-04-28 09:27 GMT
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 நின்ஜா மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2022 நின்ஜா 300 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் - லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. முந்தைய 2021 எடிஷனும் இதே நிறங்களில் கிடைக்கின்றன. எனினும், மூன்று நிறங்களில் எபோனி பெயிண்ட் கொண்ட வேரியண்டில் புது கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.மற்ற இரு நிற வேரியண்ட்கள் தோற்றத்தில் 2021 கவாசகி நின்ஜா 300 போன்றே காட்சியளிக்கின்றன. 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 296சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.4 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடலிலும் டுவின் பாட் ஹாலோஜன் ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 கவாசகி நின்ஜா 300 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வினியோகம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
Tags:    

Similar News