பைக்
கவாசகி வெர்சிஸ் 650

ரூ. 1.5 லட்சம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கும் கவாசகி பைக் - ஆனால் ஒரு டுவிஸ்ட்!

Update: 2022-04-27 08:53 GMT
கவாசகி நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


கவாசகி  நிறுவனம் 2022 EICMA நிகழ்வில் புதிய 2022 வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது விற்பனை செய்யப்படும் கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மும்பையில் உள்ள அன்சென் கவாசகி விற்பனையகம் வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 1.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த தள்ளுபடி ஏப்ல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் கவாசகி வெர்சிஸ் 650 மாடலுடன் 2+2 ஆண்டுகள் எக்ஸ்டெண்டட் வாரண்டி பேக் தேர்வு செய்வோருக்கு மட்டும் தான் இந்த தள்ளுபடி பொருந்தும். தள்ளுபடியை சேர்த்தால் கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 லட்சத்து 75 ஆயிரமாக குறைந்து விடும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளில் புதிய TFT டிஸ்ப்ளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர மோட்டார்சைக்கிளின் அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 பி.ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் தான் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News