பைக்
ராயல் என்பீல்டு

அசத்தல் மாற்றங்கள், புது அம்சங்களுடன் உருவாகும் ஹிமாலயன் 450

Update: 2022-04-26 09:19 GMT
ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் ஹிமாலயன் 450 மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹிமாலயன் 450 மாடல் தொடர்ந்து பிரி-ப்ரோக்‌ஷன் டெஸ்ட்களை எதிர்கொண்டு வருகிறது. இதை அடுத்து புதிய ஹிமாலயன் 450 ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. தற்போதைய ஸ்பை படங்களில் புது ஹிமாலயன் 450 மாடலில் டெயில் பகுதி பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. 


Photo Source: Rushlane

அதன்படி புதிய ஹிமாலயன் மாடலின் எக்சாஸ்ட் கேனிஸ்டர், ஹிமாலயன் 411 மாடலில் உள்ளதை விட அளவில் சிறியதாக இருக்கிறது. மேலும் இது அதிநவீன டிசைன் மற்றும் பிளாக் நிற ஹீட் ஷீல்டு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற லைட்கள் இதுவரை எந்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படவில்லை.

இத்துடன் அப்சைடு டவுன் முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், வயர் ஸ்போக் வீல்கள் உள்ளன. சமீபத்திய ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு நெருங்கிய நிலையிலேயே காட்சியளிக்கிறது.
Tags:    

Similar News