பைக்
கோப்புப்படம்

இரண்டு புதிய 650சிசி மாடல்களை இந்தியாவில் சோதனை செய்யும் ராயல் என்பீல்டு

Update: 2022-04-23 08:23 GMT
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஷாட்கன் 650 மற்றும் Meteor 650 மாடல்களை சோதனை செய்ய துவங்கி இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் இந்திய சந்தையிலும் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலுன் புதிய Meteor 650 மாடலும் சோதனை செய்யப்படுகிறது.

புதிய 650 டுவின் மாடல்கள் தற்போது ராயல் என்பீல்டு விற்பனை செய்து வரும் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்களில் 650சிசி, பேரலல் டுவின், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது. எனினும், இவற்றின் செயல்திறன் வெவ்வேறாக இருக்கும் படி டியூன் செய்யப்பட இருக்கிறது.

Meteor 650 டிசைன் தற்போது விற்பனை செய்யப்படும் Meteor 350 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் குரூயிசர் ஸ்டான்ஸ் மற்றும் ஏராளமான குரோம் பிட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் முன்புறம் USD ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிடில்வெயிட் பிரிவில் பிரீமியம் மாடலாக இருக்கும். இதில் எல்.இ.டி. ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சேடில் ஸ்டே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் Meteor 650 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும்.

அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்Kளை அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்கள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 
Tags:    

Similar News