பைக்
யமஹா

இருசக்கர வாகனங்களுக்கு பவர் ஸ்டீரிங் உருவாக்கும் யமஹா

Update: 2022-04-19 08:56 GMT
யமஹா நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான பவர் ஸ்டீரிங் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகிறது.

இன்று வரை இந்த தொழில்நுட்பம் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான ப்ரோடோடைப் இந்த ஆண்டே மோட்டார்சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மூன்று வழிகளில் எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் இயங்குகிறது. முதலில் மேக்னெடோ-ஸ்டிரிக்டிவ் டார்க் சென்சார் ஸ்டீரிங் அசைவு, ரைடர் எவ்வளவு ஃபோர்ஸ் போடுகிறார் என்பதை கணக்கிடும். இந்த விவரங்கள் கண்ட்ரோல் போர்டுக்கு அனுப்பப்படும். 

பின் அந்த போர்டு, ஹெட்-ஸ்டாக் முன்புறத்தில் போல்டெட் மற்றும் ஸ்டீரிங் ஸ்டெம் உடன் கியர் செய்யப்பட்டு இருக்கும் எலெக்டிரானிக் ஆக்டுவேட்டரிடம் எவ்வளவு அசிஸ்டண்ஸ் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கும். 

மோட்டார்சைக்கிளிங்கின் போது ஏற்படும் ஒட்டுமொத்த சோர்வை போக்குவதற்காகவே இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரிங் டேம்ப்பர்களை போன்றே இந்த எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் சிஸ்டம் ரைடர்களுக்கு உதவியாக இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி பணிகளை அடுத்து, இந்த தொழில்நுட்பம் நம்மிடையே பயன்பாட்டுக்கு வர மேலும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை ஆகும். 

Tags:    

Similar News