பைக்
யமஹா ஃபுளோ

யமஹாவின் புது 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

Update: 2022-04-18 08:47 GMT
யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்கூட்டர் மாடலை அசத்தலான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ எனும் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஃபுளூ மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்காமல், ஃபன்கியாக காட்சியளிக்கிறது. புதுிய யமஹா ஃபுளூ மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.6 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்ற செயல்திறன் வழங்கும் இரு ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் பசினோ 125 போன்ற மாடல்களும் இதே போன்ற வெளிப்படுத்துகிறது. எனினும், ஃபுளூ மாடலின் அம்சங்கள் வேற மாதிரி இருக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் புதிய யமஹா ஃபுளூ மாடலில் ஏ.பி.எஸ். வசதி, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜிங், முழுமையான எல்.இ.டி. லைட்டிங், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News