பைக்
ரூ.69,900 விலையில் ஹீரோ அறிமுகம் செய்துள்ள டெஸ்டினி 125 XTEC ஸ்கூட்டர்
இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 XTEC ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி ஹெட்லேம்புகள், ரெட்ரோ டிசைன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் தொழில்நுட்பம், ஐடெல் ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம், புதிய டிஜி அனலாக் ஸ்பீடோமீட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இதன்மூலம் நாம் போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்டுகளை மேற்கொள்ளமுடியும். இதைத்தவிர யூஎஸ்பி சார்ஜர், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆப், சீட் பேக்ரெஸ்ட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.
இரண்டு ட்ரிம்களில் வெளியாகும் இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் ட்ரிம்மின் விலை ரூ.69,900-ஆகவும், அதிக அம்சங்கள் கொண்ட ட்ரிம்மின் விலை ரூ.79,990-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.