பைக்
யமஹா ஃபோர்ஸ் எக்ஸ்

ரூ.1.07 லட்சத்தில் அறிமுகமாகியுள்ள யமாஹா ஸ்கூட்டர்

Published On 2022-03-31 13:04 IST   |   Update On 2022-03-31 13:04:00 IST
ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
2022 ஆண்டுக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. மேலும் இதில் முன்பக்கத்தில் உள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளன.

ஹெட்லேம்பிற்கு கீழ் தரப்பட்டுள்ள ஃபிரெண்ட் பீக் இந்த ஸ்கூட்டருக்கு தனித்தன்மையான தோற்றத்தை தருகிறது. மேலும் இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 125சிசி ஏர் கூல்ட் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 6500rpm-ல் 8.9bhp பவரை தரக்கூடியது. அதேபோல 5000rpm-ல் 9.7Nm பீக் டார்க்கையும் இந்த ஸ்கூட்டர் தரக்கூடியது. இதன் டிரான்ஸ்மிஷனுக்காக சிவிடி கியர்பாக்ஸ் தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் 10 இன்ச் வீல் முன்பக்கத்தில் பின்பக்கத்திலும் தரப்பட்டுள்ளன.  இதன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம்யூனிட்டும் தரப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்காக இதில் ஃப்ரண்ட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக் 92 கிலோ எடையை கொண்டது. மேலும் ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.07 லட்சமாகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Similar News