பைக்
மாணவர் தயாரித்த மின்சார பைக்

தானாகவே சார்ஜ் ஏறும் மின்சார பைக்- மதுரை மாணவர் கண்டுபிடித்து சாதனை

Published On 2022-03-25 14:54 IST   |   Update On 2022-03-25 14:54:00 IST
இந்த பைக்கில் 20 கி.மீ சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். 

கல்லூரியில் எம்.எஸ்.சி படிக்கும் தனுஷ்குமார் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை, தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார்.

இந்த பைக் ஓடும்போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 40 கி.மீ தூரம் வரை செல்லும் என்றும், 20 கி.மீ சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் எனவும் தனுஷ்குமார் கூறியுள்ளார்.

ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்பதால் இதனை சாலைகளில் ஓட்டி செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News