பைக்
ஓலா எலக்ட்ரிக்

வெறும் 5 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ்- ஓலா மின் ஸ்கூட்டரில் வரவுள்ள புதிய தொழில்நுட்பம்

Published On 2022-03-22 13:13 IST   |   Update On 2022-03-22 13:13:00 IST
எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அனைத்தும் சிறந்த, அதிவேகம் கொண்ட, அதிக ஆற்றலை வழங்கக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த பேட்டரி டெக்னாலஜி நிறுவனமான ஸ்டோர்டாட்டுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்டோர்டாட் நிறுவனம் அதிவேகத்தில் சார்ஜ் ஏறும் தொழில்நுட்பத்தை (XFC) அடிப்படையாக கொண்ட பேட்டரிகளை தயாரிப்பதில் பெயர்பெற்றது. தற்போது இந்த நிறுவனம் எக்ஸ்.எஃப்.சி பேட்டரியை ஓலாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர்களை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதத்திற்கு வெறும் 5 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பேட்டரிக்களை கொண்ட ஓலா பைக்குகள் அதிக அளவில் தயாரிக்கப்படும். அதேசமயம் வெறும் 2 நிமிடங்களில் முழுதாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பத்தையும் ஸ்டோர் டாட் பரிசோதித்து வருகிறது. 

அடுத்த 10 வருடங்களுக்குள் இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பரிட்சயம் செய்யப்படும். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அனைத்தும் சிறந்த, அதிவேகம் கொண்ட, அதிக ஆற்றலை வழங்கக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News