பைக்
டிவிஎஸ் ஜுப்பிட்டர்

ரூ.80,973 விலையில் ப்ளூடூத், வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதிகளுடன் வரும் டிவிஎஸ் ஜுப்பிட்டர் ZX

Published On 2022-03-17 08:28 GMT   |   Update On 2022-03-17 08:28 GMT
110 சிசி செக்மெண்ட் கொண்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.
டிவிஎஸ் நிறுவனம் புதிய டிவிஎஸ் ஜுப்பிட்டர் ZX ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ்ஸின் SMARTXONNECT மற்றும் வாய்ஸ் அசிஸ்டென் ஆகியவற்றுடன் வருகிறது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் அசிஸ்டெண்ட், எஸ்.எம்.எஸ்/கால் அலெர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. 110 சிசி செக்மெண்ட் கொண்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

டிவிஎஸ் ஜிப்பிட்டரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் மூலம் கனெக்கெட் செய்ய முடியும். இதைத்தவிர ப்ளூடூத் ஹெட்போன்ஸ், ஒயர் உள்ள ஹெட்போன்ஸ், ப்ளூடூத் ஹெல்மெட் ஆகியவற்றையும் இந்த ஸ்கூட்டரில் இணைக்க முடியும்.

ஸ்கூட்டரின் அம்சங்கள் ஸ்பீட்டோமீட்டரில் காட்டப்படும் என்றும், ஆடியோ ஃபீட்பேக் ஹெட்போன் வழியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள 110 சிசி இன்ஜின் 7,500 rpm-ல் 5.8 kW அதிகபட்ச பவரை தரக்கூடியது. இதுத்தவிர 5,500 rpm-ல் 8.8 Nm டார்க்கை உருவாக்ககூடியது. இதன் இன்ஜின் intelliGo தொழில்நுட்பம் மற்றும் ஐ-டச் ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி ஹெட்.லேம்ப், 2 லிட்டர் குளோவ்பாக்ஸ் மொபைல் சார்ஜர், 21 லிட்டர் ஸ்டோரேஜ் மற்றும் பிரண்ட் டிஸ்க் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.80,973-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News