பைக்
பைக்குகள்

இந்தியாவில் சரிவை சந்தித்த இருசக்கர வாகனங்களின் விற்பனை

Published On 2022-03-04 10:21 GMT   |   Update On 2022-03-04 10:21 GMT
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறைந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிப் பற்றாக்குறை, கிராமப்புறங்களில் தேவை குறைவு, அதிக விலை ஆகிய காரணங்களால் இந்த விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதர் எனர்ஜி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 140 சதவீதம் வளர்ச்சியை கண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பைக்கை பொறுத்தவரை கடந்த வருடத்தை விட 20 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப், 32 சதவீத விற்பனை வீழ்ச்சியையும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, 31 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த வருட பிப்ரவரியில் 5 சதவீதம் குறைந்துள்ளது. சுசூகி 3.3 சதவீதம் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

அதே சமயம் அதார் எனர்ஜி நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் 140 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
Tags:    

Similar News