பைக்
அதர் மின் ஸ்கூட்டர்

ரூ.4,360 இ.எம்.ஐயில் வாங்கக்கூடிய சிறந்த இ- ஸ்கூட்டர்

Published On 2022-02-25 14:01 IST   |   Update On 2022-02-25 14:01:00 IST
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்கள் மின்சார வாகனத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இது தவிர இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் மின் வாகனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அதர் நிறுவனம் தனது அதர் 450 பிளஸ் மற்றும் அதர் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை எளிய முறையில் வாங்கும் வகையில் இ.எம்.ஐ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அதர் நிறுவனத்தின் 450 எக்ஸ் மற்றும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை  ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பிறகு இ.எம்.ஐ கட்டணமாக மாதம் ரூ.4,360-ஐ 36 மாதங்களுக்கு செலுத்தினால் போதும். 

இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.31 லட்சம் ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. அதர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் 6000W மோட்டார் உடன் 2.9kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதனால் பேட்டரி வெறும் 35 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும்.

இந்த ஸ்கூட்டரை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Similar News