பைக்
ஹோண்டா சிபிஆர் (கோப்பு புகைப்படம்)

யமஹாவிற்கு போட்டியாக ஹோண்டா அறிமுகம் செய்யவுள்ள புதிய 150 சிசி பைக்

Published On 2022-02-23 15:53 IST   |   Update On 2022-02-23 15:53:00 IST
இந்த புதிய பைக், யமஹாவின் ஆர்15 வி4 மாடலுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

150 சிசி கொண்ட இந்த பைக் யமஹா நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஃபேர்ட் பைக்குகளுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சி.பி.ஆர்150ஆர் பைக்கின் விலை இந்தியாவில் ரூ.1.71 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹோண்டாவின் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு (விலை ரூ.1.73 லட்சத்தில் இருந்து தொடக்கம்) போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News