பைக்
ராயல் என்ஃபீல்டு பைக்

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் சில முக்கிய மோட்டார் பைக்குகள்

Update: 2022-02-20 06:30 GMT
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள சில முக்கிய பைக்குகளையும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இப்போது காணலாம்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஆட்டோமொபைல் விற்பனை வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411: ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 411 பைக் இந்த ஆண்டு அறிமுகாகவுள்ளது. ஹிமாலயன் வகை பைக்கான இது வாங்கக்கூடிய விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ராயல் என்ஃபீல்டு வகை பைக்குகளுடைய இன்ஜின் மற்றும் பிளார்ட்பார்மை இது கொண்டிருந்தாலும் லோவர்ட் சஸ்பென்ஷன் கிட் மற்றும் சிறிய முன்பக்க சக்கரங்கள் தரப்பட்டுள்ளன. 

மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

2022 கே.டி.எம் 390 அட்வென்சர்: இந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் நிறைய வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் முக்கியமான ஒன்று கே.டி.எம் 390 அட்வெஞ்சர். இந்த புதிய ஏடிவி வகை பைக் வெளிப்புற ஸ்டைலிங்குடன் வரும் என கூறப்படுகிறது. புதிய டூயல்- டோன் ட்ரிம்மை இந்த பைக் கொண்டுள்ளதாகவும், எப்போதுவேண்டுமானாலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.ராயல் என்பீல்ஃடு ஹண்டர் 350: ஸ்கிராம் 411-ஐ தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வகை பைக்கை அறிமுகம் செய்கிறது. இந்த பைக் மீட்டோர் 350 வகையை சார்ந்தது என்றாலும்  அதிகம் ஆஃப் ரோட் செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜெனரேஷன் கே.டி.எம் ஆர்.சி390: ஆர்.சி 200 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் கே.டி.எம்-ன் புதிய ஜெனரேஷன் ஆர்.சி 390 வெளியாகவுள்ளது. இதில் முழுதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டல் பேனல் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக் தற்போது உள்ள மாடலை விட சற்று விலை கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News