பைக்
ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்

திடீரென இந்த பைக்கிற்கு ரூ.1 லட்சம் விலை குறைப்பு செய்த ஹோண்டா நிறுவனம்

Published On 2022-02-16 11:50 GMT   |   Update On 2022-02-16 11:50 GMT
இந்த பைக் பெரிதும் விற்கப்படாததே இந்த விலை குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கை இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அட்வென்ஜர் டூரர் ரக பைக்கான இதற்கு தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

சிபி500எக்ஸ் பைக் அறிமுகமானபோது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பைக்கின் விலை 1.07 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.



சிபி500எக்ஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தாலும், பெரிதாக விற்பனை இல்லை. இதன் விலை அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471.03 சிசி, நான்கு-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17.7 லிட்டர்களாக உள்ளது. 
Tags:    

Similar News