பைக்
கவாசகி இசட்650ஆர்.எஸ்.

விரைவில் இந்தியா வரும் கவாசகி ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள்

Update: 2022-01-23 11:28 GMT
கவாசகி நிறுவனத்தின் சமீபத்திய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


கவாசகி நிறுவனம் விரைவில் புதிய இசட்650ஆர்.எஸ். 50th ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கவாசகி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. 

ஏற்கனவே கவாசகி இசட்650ஆர்.எஸ். மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிஷன் மாடலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே இசட்650ஆர்.எஸ். ஆனிவர்சரி எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதே மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர கவாசகி முடிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. கவாசகி நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க Z1 மோட்டார்சைக்கிள் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாசகி இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் கேண்டி எமிரால்டு கிரீன் நிறம் மற்றும் கோல்டன் நிற அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. 

கவாசகி இசட்650ஆர்.எஸ். ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

விலையை பொருத்தவரை புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை  நிர்ணயம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News