பைக்
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் டீசர்

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் டீசர் வீடியோ வெளியீடு

Update: 2022-01-07 06:17 GMT
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனது யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கான புதிய டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது.


இந்தியாவில் யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள்களை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் இந்தியவில் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் அட்வென்ச்சர் பைக் மாடலாகவும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், டீசரில் ஸ்கிராம்ப்ளர் மாடல் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. புதிய யெஸ்டி மாடலில் பீக் போன்ற முன்புற ஃபெண்டர், நீண்ட சஸ்பென்ஷன், டையர் ஹக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை இருக்கை அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஸ்போக் வீல்கள், குரோம் எக்சாஸ்ட் கேனிஸ்டர் வழங்கப்படுகிறது.புதிய யெஸ்டி மாடலில் 334 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. திறன், 32.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News