பைக்
யெஸ்டி ரோட்கிங்

யெஸ்டி ரோட்கிங் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2021-12-26 05:45 GMT
யெஸ்டி பிராண்டின் ரோட்கிங் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


யெஸ்டி நிறுவனம் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான பணிகளை துவங்கியது. தற்போது ரோட்கிங் அட்வென்ச்சர் மாடல் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என யெஸ்டி அறிவித்தது. முன்னதாக யெஸ்டி நிறுவன மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகின.

புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News