பைக்
பெனலி டி.ஆர்.கே.251

ரூ. 2.51 லட்சம் விலையில் புதிய பெனலி மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2021-12-17 06:00 GMT   |   Update On 2021-12-17 06:00 GMT
பெனலி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


பெனலி இந்தியா நிறுவனம் புதிய டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 6 ஆயிரம் ஆகும்.

புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மாடல் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.ஆர்.கே. 502 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இதில் டுவின்-பாட் ஹெட்லைட், மூக்கு போன்ற தோற்றத்தில் பெண்டர், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், 18 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.



இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 21.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் டி.ஆர்.கே. மாடல் கே.டி.எம். 250 அட்வென்ச்சர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News