பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் சிம்பில் எனர்ஜி உலகின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது.
தமிழகத்தில் சிம்பில் எனர்ஜி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை
பதிவு: டிசம்பர் 09, 2021 12:49 IST
சிம்பில் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
சிம்பில் எனர்ஜி நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே ரூ. 2500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
உற்பத்தி பணிகளை துவங்க சிம்பில் எனர்ஜி முதற்கட்டமாக ஓசூரில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முதல் ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை 2022 துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
தமிழ அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி முதலீட்டில் தனது இரண்டாவது ஆலையை உருவாக்கும் பணிகளை துவக்க இருக்கிறது. இந்த ஆலை 600 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது. இது 2023 ஆம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டுக்கு வரும்.
Related Tags :