ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக்

எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தும் ஹீரோ எலெக்ட்ரிக்

Update: 2021-10-27 11:18 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் விற்பனை டச் பாயிண்ட்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.


ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2022 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க ஆயிரம் விற்பனை டச் பாயிண்ட்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

விற்பனை மையங்கள் மட்டுமின்றி உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிதியாண்டில் விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது. தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அடிரா, பிளாஷ், ஆப்டிமா ஹெச்.எக்ஸ். மற்றும் என்.வை.எக்ஸ். ஹெச்.எக்ஸ். போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 
Tags:    

Similar News