ஆட்டோமொபைல்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

வினியோக விவரங்களை மாற்றிய ஓலா எலெக்ட்ரிக்

Published On 2021-10-21 10:18 GMT   |   Update On 2021-10-21 10:18 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு விவரங்கள் வெளியாகி உள்ளது.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முழு கட்டண வசூலை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இரு ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா ஸ்கூட்டர் மாடல்களுக்கான முழு கட்டணத்தை நவம்பர் 10 ஆம் தேதி செலுத்தினால் போதும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை நவம்பர் 10 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முழு தொகை செலுத்தியதும் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி தாமதமாகி வருவதை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இரு ஸ்கூட்டர்களின் வினியோகம் அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீபாவளிக்கு பின் வினியோகம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News