ஆட்டோமொபைல்
யமஹா ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட்

யமஹாவின் ரேஇசட்.ஆர். ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-09-08 05:08 GMT   |   Update On 2021-09-08 05:08 GMT
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட், ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.


யமஹா நிறுவனத்தின் தி கால் ஆப் தி புளூ திட்டத்தின் கீழ் ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட், ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யமஹா ரேலி இசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் விலை ரூ. 76,830 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் மற்றும் ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் மாடல்களில் ஏர்-கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 125சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.எஸ். திறன், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது. இரு ஸ்கூட்டர்களின் மொத்த எடை 99 கிலோ ஆகும்.



இரு ஸ்கூட்டர்களிலும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரில் ஹைப்ரிட் சிஸ்டம் வசதியை வழங்குகிறது. பெட்ரோல் விலை உயர்வு காலக்கட்டத்தில் ஸ்மார்ட் ஹைப்ரிட் எரிபொருள் செலவை குறைக்கும் பணியை மேற்கொள்ளும்.

ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் இரு ஸ்கூட்டர்களுக்கும் குவைட் என்ஜின் ஸ்டார்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் & ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 190 எம்.எம். முன்புற டிஸ்க், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. 
Tags:    

Similar News