ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் டிரையம்ப் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2021-07-27 07:24 GMT   |   Update On 2021-07-27 07:24 GMT
பஜாஜ் டிரையம்ப் கூட்டணியில் உருவாகி இருக்கும் குரூயிசர் மாடல் திட்டமிட்டப்படி வெளியாகாது என கூறப்படுகிறது.


பஜாஜ் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் 200சிசி-250சிசி திறன் கொண்ட குரூயிசர் மாடல்கள் உருவாகி வருகின்றன. இந்த கூட்டணியில் உருவாகி வரும் முதல் குரூயிசர் மாடல் 2023 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் 2022 ஆம் ஆண்டு வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டது. 

தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் ப்ரோடோடைப் வெர்ஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. டெல்டா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் பிரிட்டனில் கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் டிரையம்ப் பொறியாளர்கள் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 



இதன் காரணமாக மோட்டார்சைக்கிள் வெளியீடு 6 முதல் 9 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 2023 ஆண்டு இறுதியிலோ 2024 துவக்கத்திலோ அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய மாடல் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் நிறுவனம் 250சிசி பிளாட்பார்மில் புதிய பல்சர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு என்ஜின், ஆயில்-கூலர் ப்ரோவிஷன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய டிரையம்ப் மாடலிலும் இதேபோன்ற என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News