ஆட்டோமொபைல்
2022 கே.டி.எம். RC 8C

ஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த சூப்பர்பைக்

Published On 2021-07-26 06:25 GMT   |   Update On 2021-07-26 06:25 GMT
2022 கே.டி.எம். RC 8C டிராக் மோட்டார்சைக்கிள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.


கே.டி.எம். நிறுவனம் 2022 RC 8C டிராக் மோட்டார்சைக்கிளை சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய RC 8C மூலம் கே.டி.எம். நிறுவனம் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய 2022 கே.டி.எம். RC 8C லிமிடெட் எடிஷன் யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. 

மொத்தம் 100 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் 4 நிமிடங்கள் 32 நொடிகளில் விற்றுத் தீர்ந்ததாக கே.டி.எம். தெரிவித்து இருக்கிறது. முன்பதிவு முழுக்க ஆன்லைனிலேயே நடைபெற்றது. 2022 கே.டி.எம். RC 8C மாடல் 890 டியூக் ஆர் உருவாக்க பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



2022 கே.டி.எம். RC 8C மாடலில் 889சிசி LC8 பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர், 101 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மொத்த எடை 140 கிலோ ஆகும். 

தற்போது 100 பேர் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்துள்ள போதிலும், இவர்களில் 25 பேர் மட்டுமே சிறப்பு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 25 பேருக்கும் முன்னாள் மோட்டோ ஜிபி வீரர்களான மிகா கலியோ, டேனி பெட்ரோசா ஆகியோர் பந்தய களத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க இருக்கின்றனர். 

Tags:    

Similar News