ஆட்டோமொபைல்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்த ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

Published On 2021-07-24 08:28 GMT   |   Update On 2021-07-24 08:28 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் கனெக்டெட் அம்சங்களை கொண்டிருக்கிறது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 துவக்க விலை ரூ. 72,250, எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முன்பதிவு ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மையங்கள் மற்றும் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.

விலை விவரங்கள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் - ரூ. 72,250
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் - ரூ. 76,500
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 கனெக்டெட் - ரூ. 79,750

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 124.6சிசி PGM-Fi என்ஜின் மற்றும் ஹீரோவின் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. பவர், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் சஸ்பென்ஷன், பிரேக், வீல் மற்றும் டையர் உள்ளிட்டவை முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக ஹீரோ கிளாமர் XTEC  மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கனெக்டெட் தொழில்நுட்பம், மேம்பட்ட என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News