ஆட்டோமொபைல்
யமஹா YZF-R7

வெளியீட்டுக்கு முன் இணையத்தில் லீக் ஆன யமஹா மோட்டார்சைக்கிள் புகைப்படங்கள்

Published On 2021-05-17 06:13 GMT   |   Update On 2021-05-17 06:13 GMT
யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் R7 மோட்டார்சைக்கிள் நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


யமஹா நிறுவனத்தின் புதிய YZF-R7 மோட்டார்சைக்கிள் நாளை (மே 18) அறிமுகமாகிறது. இந்த நிலையில், புதிய YZF-R7 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படங்கள் புது மோட்டார்சைக்கிள் டிசைன் மற்றும் இதர விவரங்களை அம்பலப்படுத்தி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் யமஹா புதிய YZF சீரிஸ் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டது. பின் இந்த மாடலின் வெளியீட்டு தேதியை டீசர் வீடியோ வடிவில் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இதன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



கடந்த ஆண்டு வரை யமஹா தனது YZF-R6 மோட்டார்சைக்கிளை உலகின் சில நாடுகளில் விற்பனை செய்து வந்தது. எனினும், புதிய யூரோ 5 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் இந்த மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் இதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டும் இந்த மாடல் உருவாக்கப்பட்டது. அவை பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 

முன்னதாக 1999 ஆண்டு யமஹா R7 மோட்டார்சைக்கிளை உற்பத்தி செய்தது. எனினும், அது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இது மொத்தத்தில் 500 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் தொடருக்காக உருவாக்கப்பட்டது. இதில் உள்ள 749சிசி, இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் 106 பிஹெச்பி பவர் வழங்கியது.
Tags:    

Similar News