ஆட்டோமொபைல்
2021 சுசுகி ஹயபுசா

2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-04-23 05:57 GMT   |   Update On 2021-04-23 05:57 GMT
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் ஐஎம்யு சிஸ்டம், ரைடு-பை-வயர் திராட்டிள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
 

சுசுகி நிறுவனம் 2021 ஹயபுசா மாடலை ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தகவலை சுசுகி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹயபுசா பல ஆண்டுகளாக பிரபல மாடலாக இருக்கிறது.

2021 ஹயபுசா மாடல் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 



புது மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது. 
Tags:    

Similar News