ஆட்டோமொபைல்
டீடெல் ஈசி பிளஸ்

மிக குறைந்த விலையில் எலெக்ட்ரிக் மொபெட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-03-21 04:15 GMT   |   Update On 2021-03-20 11:20 GMT
டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மொபெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டீடெல், இந்திய சந்தையில் குறைந்த வேகத்தில் செல்லும் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. டீடெல் ஈசி பிளஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

புதிய ஈசி பிளஸ் ஸ்கூட்டரை டீடெல் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ரைடு ஆசியா எக்ஸ்போ நிகழ்வில் டீடெல் வெளியிட்டது. குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 20ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 



டீடெல் ஈசி பிளஸ் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

குறைந்த அளவு பாடி பேனல்களை கொண்டுள்ள ஈசி பிளஸ் ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பில் இருவர் அமரும் வகையில் உள்ளது. மேலும் இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News