ஆட்டோமொபைல்
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சி பெற்ற ஒகினவா

Published On 2021-03-18 06:11 GMT   |   Update On 2021-03-18 06:11 GMT
ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. விற்பனை மட்டுமின்றி நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முன்பை விட மும்மடங்கு அதிகளவில் விவரங்களை கேட்டு செல்வதாக ஒகினவா தெரிவித்து உள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே காரணம் என ஒகினவா தெரிவித்தது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒகினவா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் அதிவேக இ ஸ்கூட்டர்கள் பிரிவில் அதிக யூனிட்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் ஒகினவா இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. 



இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100-ஐ நெருங்கி வரும் நிலையில், இருசக்கர வாகனம் வைத்திருப்போர் எளிய குறைந்த விலை பயண முறைகளுக்கு மாற துவங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது சுற்றுச்சூழலில் கார்பன் மாசு பெருமளவு குறையும்.  

தற்போது ஒகினவா நிறுவனம் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.14 லட்சம் ஆகும். இவற்றில் குறைந்த வேகத்தில் செல்லும் ஸ்கூட்டர்களான ஒகினவா ஆர்30, லைட் மற்றும் டூயல் போன்ற மாடல்களும் அடங்கும்.

இதுதவிர ஒகினவா ரிட்ஜ் பிளஸ், பிரைஸ் ப்ரோ மற்றும் ஐபிரைஸ் பிளஸ் என மூன்று அதிவேக மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்துடன் வரும் மாதங்களில் குரூயிசர் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என இரண்டு புது மாடல்களை அறிமுகம் செய்ய ஒகினவா திட்டமிட்டு இருக்கிறது.
Tags:    

Similar News