ஆட்டோமொபைல்
கேஎம்3000

முன்பதிவில் புது மைல்கல் கடந்த கபிரா மாடல்கள்

Published On 2021-03-09 06:44 GMT   |   Update On 2021-03-09 06:44 GMT
கபிரா மொபிலிட்டி நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் முன்பதிவில் அசத்தி வருகின்றன.


கோவாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான கபிரா மொபிலிட்டி இந்திய சந்தையில் கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவும் அதே தினத்தில் துவங்கியது.

கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களை சேர்த்து இரு மாடல்களை வாங்க இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கபிரா மொபிலிட்டி தெரிவித்து இருக்கிறது. மேலும் இரு மாடல்களின் வினியோகம் மே 1, 2021 அன்று துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.



கவாசகி நின்ஜா 300 தோற்றம் கொண்டுள்ள கேஎம்3000 விலை ரூ. 1,26,990 என்றும் கேஎம்4000 விலை ரூ. 1,36,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கவாசகி கேஎம்4000 தோற்றத்தில் கவாசகி இசட்1000 போன்று காட்சியளிக்கிறது. 

இரு மாடல்களிலும் முறையே 6 கிலோவாட் மற்றும் 8 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளன. 

புதிய கேஎம்3000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும், கேஎம்4000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்கின்றன.
Tags:    

Similar News