ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி

ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

Published On 2021-02-27 08:46 GMT   |   Update On 2021-02-27 08:46 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆர் நைன் டி மாடல் விலை ரூ. 18,50,000 என்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மாடல் விலை ரூ. 16,75,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இரு மாடல்களும் சிபியு முறையில் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. ஆர் நைன் டி கிளாசிக் ரோட்ஸ்டர், ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் பெயருக்கு ஏற்றார்போல் ஸ்கிராம்ப்லர் ரக மாடல் ஆகும்.



இது கிளாசிக் வடிவமைப்பு, எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் மற்றும் புதிய வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. மெக்கானிக்கல் அம்சங்கள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி 2021 பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன்டி ஸ்கிராம்ப்லர் மாடல்களில் 1170சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 107.2 பிஹெச்பி பவர், 116 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.

இரு மாடல்களும் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளன. பாதுகாப்பிறஅகு ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் ப்ரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல், புதிய சஸ்பென்ஷன் ஸ்டிரட் மற்றும் டிராவல் டிபென்டென்ட் டேம்பிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News